Sunday, June 2, 2013

FREE EARLY LEARNING PROGRAM FOR CHILDREN OF Pre-SCHOOLING AGE

பள்ளி செல்லும் வயதுக்கு முன் உள்ள குழந்தைகளின் ஆங்கில அறிவுத்திறன் மேம்பாடு

6 மாதம் முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகளின் ஆங்கில அறிவுத்திறனை மேம்படுத்த விரும்பும் பெற்றோர், இந்த விளக்கத்தினை தொடர்ந்து படிக்கவும். (உங்கள் வீட்டில் இன்டர்நெட் வசதியுடன் கூடிய கம்பியூட்டர் இருந்தால் போதும், இதற்காக நீங்கள் வேறு செலவுகள் செய்ய வேண்டியதில்லை)
Literacy Center Education Network – பள்ளி செல்லும் பருவத்திற்கு முன் உள்ள குழந்தைகளுக்கு, வல்லுநர் குழுவால் அழகுடன் வடிவமைக்கப்பட்ட ஆங்கில கல்விப்பாடதிட்டங்களை இலாப நோக்கமில்லாமல் வழங்குகிறது.
220 நாடுகளுக்கு மேல் பயன்படுத்தப்படும் இந்த இணையதளத்தினை மழலையர் உள்ள அனைத்து வீடுகளிலும், நூலகங்கள், பள்ளிகளில் பயன்படுத்தல் மிக்க நலம். ஆங்கிலம் தாய்மொழியாக இல்லாத மழலைகள், இம்மொழியை ஆரம்ப நிலையிலேயே கற்றுக் கொள்வதற்கு மிகச்சிறந்த சூழலினை உருவாக்கி தருகிறது.பள்ளிப் பருவத்திற்கு முந்தைய கல்வித்திட்டம் என்பதால் மழலைப் பள்ளி அல்லது வீடுகளில் ஒருவர் ஆலோசனை-வழங்கு அடிப்படையில் இத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment